உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஒரு வழிப்பாதை திட்டம் கைவிட எம்.எல்.ஏ. மனு

 ஒரு வழிப்பாதை திட்டம் கைவிட எம்.எல்.ஏ. மனு

திருப்பூர்: அவிநாசி ரோட்டை ஒரு வழிபாதையாக மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் என, திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ. விஜயகுமார், கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுதொடர்பாக அவர் அளித்த மனுவில், 'அவிநாசி ரோட்டினை ஒரு வழிபாதையாக மாற்றி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வாகனங்களை, போலீஸ் கமிஷனர் அலுவலக சந்திப்பில் இருந்து புஷ்பா மேம்பாலம் சந்திப்பு நோக்கி செல்ல இயலாது. அவிநாசி ரோட்டில் பல்வேறு குடியிருப்புகள், கடைகள், அரசு அலுவலகங்கள் என, பல உள்ளது. மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் வாழ்வாதாரமும் கூட பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, ஒருவழிபாதை மாற்றம் செய்வதை கைவிட வேண்டும்,' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை