உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிட்டிங் துவங்கி பேக்கிங் வரை நவீனங்கள்

நிட்டிங் துவங்கி பேக்கிங் வரை நவீனங்கள்

ஆ ண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள 'நிட்ேஷா' கண்காட்சி மூலம், நிட்டிங், எம்ப்ராய்டரிங், எலாஸ்டிக் உற்பத்தி, ஆடை உற்பத்தி, பிரின்டிங் இயந்திரங்கள் மற்றும் புதிதாக அறிமுகமான உபபொருட்கள் திருப்பூருக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. நேற்று துவங்கியுள்ள நிட்ேஷா கண்காட்சியில், 'ஏ.ஐ.,' தொழில்நுட்பம் மற்றும் குறைந்த மின்சாரத்தில், அதிகவேகத்தில் இயங்கும் இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கோவை நிறுவனம் தயாரித்த 'பிரின்டிங்' நிறுவனங்களில் பயன்படுத்தும் 'ரோபோ' இயந்திரம், அறிமுகம் செய்யப்பட்டது. 'டி-சர்ட்' உற்பத்தியில் பயன்படுத்தப்படும், நான்கு வகை இயந்திரங்கள், 'டி-சர்ட்'களை மடித்து பேக்கிங் செய்யும் இயந்திரம், 'ஸ்கிரீன் பிரின்டிங்' மற்றும் 'டிஜிட்டல் பிரின்டிங்' இயந்திரங்கள்; எலாஸ்டிக் 'கட் அண்ட் ஸ்டிச்' இயந்திரம், பிரின்டிங் மற்றும் சாய ஆலைகளில் பயன்படுத்தும், 'இங்க்' வகைகள், ஆடை தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும், பட்டன், ஜிப், 'டேக்', 'ரோப்' போன்ற உப பொருட்கள், ஆடைகள் 'பேக்கிங்' செய்வதற்கான பாலிதீன் காகித பைகள், அட்டையில் தயாரித்த பைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சோலார் நிறுவனங்கள், 'லிப்ட்' பொருத்தும் நிறுவனம், லேபிள் தயாரிப்பாளர்கள், ஸ்டிக்கர் பிரின்டிங், ஆடை மட்டுமல்லாது, மற்ற பொருட்களில் பிரின்ட் செய்யும் இயந்திரங்கள், பெரிய அளவிலான மின் விசிறிகள், பின்னலாடை நிறுவனங்களில் பயன்படுத்தும், தளவாட பொருட்கள், பள்ளிகளுக்கான பெஞ்ச், சிறிய கட்டில்கள், தீயணைப்பு கருவிகள் என, ஒட்டுமொத்த பனியன் தொழிலுக்கு பயன்படும் இயந்திரங்கள், தளவாடங்கள், உபபொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. துணிகளைத் தைத்துப்பார்த்தபின்னலாடை நிறுவனத்தினர் கண்காட்சி துவக்கி வைக்கப்பட்ட நிமிடத்தில் இருந்தே, தொழில்துறையினர், 'நிட்ேஷா' அரங்குகளை பார்வையிட்டு, வர்த்தக விசாரணையை துவக்கிவிட்டனர். பின்னலாடை நிறுவனத்தினர், புதிய மெஷின்களில் அமர்ந்து, துணிகளை தைத்து பார்த்தனர். 'டிஜிட்டல் பிரின்டிங்' இயந்திரங்களில், தத்ரூபமாக பிரின்ட் செய்யப்பட்ட துணிகளை பார்வையாளர்கள் பிரமிப்பாக பார்த்து ரசித்தனர். தொழில்துறையினர் மட்டுமல்லாது, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, கல்லுாரி மாணவ, மாணவியரும், ஆசிரியர்களுடன் வந்து, கண்காட்சியை பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ