உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயிகளுக்கு வழங்க மல்பெரி நாற்று உற்பத்தி

விவசாயிகளுக்கு வழங்க மல்பெரி நாற்று உற்பத்தி

உடுமலை; உடுமலை பட்டு வளர்ச்சித்துறை சார்பில், விவசாயிகளுக்கு வழங்க மல்பெரி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.உடுமலை பகுதிகளில், வெண் பட்டுக்கூடு உற்பத்தி அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பட்டு புழுக்களுக்கு, மல்பெரி இலைகள் உணவாக வழங்கப்படுகிறது.பட்டு புழு வளர்ப்பு மனை அமைக்கும் விவசாயிகள், இதுவரை, சேலம், வேடசந்துார் உள்ளிட்ட பகுதிகளில் நாற்றுக்கள் வாங்கி நடவு செய்து வந்தனர்.இந்நிலையில், உடுமலை மைவாடியிலுள்ள, பட்டு வளர்ச்சித்துறை அலுவலக வளாகத்தில், மல்பெரி நாற்றுப்பண்ணை அமைத்து, விவசாயிகளுக்கு தேவையான மல்பெரி நாற்றுக்கள் வழங்க திட்டமிடப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.அதிகாரிகள் கூறுகையில், 'விவசாயிகளுக்கு தேவையான மல்பெரி நாற்றுக்கள் உற்பத்தி செய்து வழங்கும் வகையில், நடவு செய்யப்பட்டள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை