மேலும் செய்திகள்
ரூ.1,700 கோடி ஐ.பி.ஓ., வரும் லலிதா ஜூவல்லரி
08-Jun-2025
தனிஷ்க் தங்க பரிமாற்ற திட்ட அறிமுக விழா
11-Jun-2025
திருப்பூர் : திருப்பூர் முதன்முறையாக முன்னணி ஜூவல்லரி நிறுவனங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.'கிளவுட் நைன் ஈவன்ட்ஸ்' நிர்வாக இயக்குனர் நித்யா கூறியதாவது:எங்கள் நிறுவனம் 'லைப் ஸ்டைல்' கண்காட்சிகளை நகரப்பகுதிகளில் நடத்தி வருகிறது. கரூரில் நடந்த மல்டி பிராண்ட் ஜூவல்லரி கண்காட்சி மற்றும் விற்பனை வெற்றியடைந்ததையடுத்து, முதன்முறையாக திருப்பூரில் நடத்த உள்ளோம். அவிநாசி ரோடு, ராக்கியபாளையம் பிரிவு, வாரணாசி மல்டி பிளக்ஸ் அருகில் உள்ள கருணையம்மாள் திருமண மண்டபத்தில் வரும் 20 (நாளை) முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை, ைஹதராபாத், கோவை, ஈரோடு முதலிய இடங்களில் இருந்து பி.எம்.ஜே., ஜெ.சி.எஸ்., ஜெ.ஜெ., டயமண்ட், என்.ஏ.சி., விஷ்வா, தேவ்ஜி முதலிய முன்னணி ஜூவல்லரி நிறுவனங்கள் அரங்குகளை அமைக்கின்றன. பிரத்யேக ரகங்கள் அறிமுகப்படுத்தப்படுவதுடன் சலுகைகளும் வழங்கப்படவுள்ளன. மேலும் விபரங்களுக்கு: 77085 68777.இவ்வாறு, நித்யா கூறினார்.
08-Jun-2025
11-Jun-2025