உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராமங்களில் அடிப்படை வசதி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

கிராமங்களில் அடிப்படை வசதி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

உடுமலை; பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூ., கட்சி சார்பில் கோட்டமங்கலம் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஊராட்சி அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு, கிளைச்செயலாளர் முருகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், வீட்டு மனை பட்டாவுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு, உபரி நிலத்தை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும்.குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும். வரதராஜபுரத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ், ஒன்றிய செயலாளர் சசிகலா, கமிட்டி உறுப்பினர் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ