உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சி பள்ளி மாணவியர் கல்லுாரிகளுக்கு களப்பயணம்

மாநகராட்சி பள்ளி மாணவியர் கல்லுாரிகளுக்கு களப்பயணம்

திருப்பூர்; நான் முதல்வன் - உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் வாயிலாக, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவியர், களப்பயணமாக, பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பயண வாகனத்தை மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே, கொடியசைத்து துவக்கி வைத்தார். இரு கல்லுாரிகளுக்கு, 250 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்டனர். 'வரும் வாரங்களில், 76 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், 5,228 மாணவர்கள், 15க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகளுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்,' என, அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜூ, உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை