முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
உடுமலை; வா.வேலுார் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக இன்று நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.குடிமங்கலம் ஒன்றியம், வாகத்தொழுவு ஊராட்சி வா.வேலுார் கிராமத்தில், புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா இன்று (20ம் தேதி) நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.வரும், 24ம் தேதி சக்தி கம்பம் போடுதல்; வரும் 26ம் தேதி ஸ்ரீ விநாயகர் பொங்கல், கங்கணம் எடுத்து வந்து கட்டுதல் நிகழ்ச்சியும், 27ம் தேதி அம்மன் திருக்கல்யாணம், சக்தி கும்பம் எடுத்தல், அம்மன் அலங்காரம், அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.வரும் 28ம் தேதி முதல் சுற்று பூவோடு வைத்தல், பொங்கல், மாவிளக்கு பூஜை, வரும் 30ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, அம்மனுக்கு அபிேஷக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது.இத்திருவிழாவில், வா.வேலுார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்கின்றனர்.