எனக்கு பிடித்த திருக்குறள் மாணவர்களுக்கு அழைப்பு
திருப்பூர், : கன்னியாகுமரியில் கடல் நடுவே, 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, 2001ல் தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை நிறுவி, வரும், 2025 உடன் ஜன., மாதத்துடன், 25 ஆண்டுகளாகிறது. வெள்ளி விழாவை கொண்டாடும் வகையில், பள்ளி கல்வித்துறை சார்பில், நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவருக்கு திருக்குறள் தொடர்புடைய கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, 'அய்யன் திருவள்ளுவரின் அடி தொடர சூளுரைப்போம்', 'எனக்கு பிடித்த திருக்குறள்' என இரு தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. வரும், 25ம் தேதி, திருப்பூர் தெற்கு வட்டார வள மையத்தில், போட்டி நடக்கிறது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒன்பது, பத்து மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி முதல்வரிடம் அனுமதி பெற்று போட்டியில் பங்கேற்கலாம் என மாவட்ட கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது.