மேலும் செய்திகள்
நல்லாறு துாய்மைப்பணி நிதி ஒதுக்கீடு எப்போது?
09-Oct-2025
திருப்பூர்: நல்லாறு பாதுகாப்பு இயக்கம் சார்பில், அமைச்சர், கலெக்டர் உள்ளிட்டோரிடம் மனு அளிக்கப்பட்டது. அவிநாசி, திருமுருகன்பூண்டி மற்றும் திருப்பூர் பகுதியில் அமைந்துள்ள நல்லாறு சமீபகாலமாக அதன் தன்மையை இழந்து மறைந்து போகும் அபாயத்தில் உள்ளது. இந்நிலையில் ஆற்றை மீட்டெடுத்து மீண்டும் அதை நல்ல முறையில் பாதுகாத்து, வளம் பெறச் செய்யும் வகையில், சமீபத்தில் இயற்கை ஆர்வலர்கள் சிலர் ஒன்றிணைந்தனர். திருமுருகன்பூண்டியை மையமாகக் கொண்டு இதற்காக, நல்லாறு பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு துவங்கப்பட்டது. அவ்வமைப்பு சார்பில் நேற்று திருப்பூரில் அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் மணிஷ் நாரணவரே ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நல்லாறு முற்றிலும் ஆக்கிரமிப்பு அகற்றி துார் வார வேண்டும்; ஆற்றினுள் கழிவு நீர் கலக்காமல் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
09-Oct-2025