உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்! விண்ணை பிளந்தது ஓம் நமசிவாய கோஷம்

நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்! விண்ணை பிளந்தது ஓம் நமசிவாய கோஷம்

திருப்பூர்; நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலின் தேரோட்டம் நேற்று பக்தர்களின் 'ஓம் நமசிவாய' கோஷம் முழங்க உற்சாகத்துடன் நடைபெற்றது.திருப்பூர், காங்கயம் ரோடு, நல்லுாரில் உள்ள விசாலாட்சியம்மன் உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலில் நேற்று ஆனித் திருத்ேதர் வைபவத்தில் தேரோட்டம் நடைபெற்றது. திருவிழா, 3ம் தேதி கணபதி ேஹாமத்துடன் அங்காளம்மன் சிறப்பு வழிபாடு நடத்தி, கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, 4ம் தேதி திருவிழா கொடியேற்றம், சுவாமி திருவீதி உலாவுடன் நடைபெற்றது.புதிதாக அமைக்கப்பட்ட தேரில் முதன் முதலாக தேர்த்திருவிழா நடந்தது. நேற்று அதிகாலை, மகா அபிேஷகமும், தொடர்ந்து உற்சவர் ரதாரோஹணமும் நடந்தது. விநாயகர் தேர் மற்றும் சோமாஸ்கந்தர் திருத்தேரில் எழுந்தருளினார். மாலை தேரோட்டம் துவங்கியது. கோவில் செயல் அலுவலர் அருள்செல்வன், அறங்காவலர் குழு தலைவர் முருகேசன், அறங்காவலர்கள் சிவக்குமார், பிரியா கனகராஜ், ஜெகதீசன், அன்னபூரணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்த துவக்கி வைத்தனர்.'ஓம் நமசிவாய' கோஷம் விண்ணதிர, திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக, பவளக்கொடி கும்மி கலைக்குழு கும்மியாட்டம், ஆதன் பொன் செந்தில்குமார் குழுவின் பெருஞ்சலங்கையாட்டம் மற்றும் கம்பத்தாட்டம், அம்மன் கலைக்குழு ஸ்ரீசக்தி பண்பாட்டு மையத்தின் ஒயிலாட்டம் மற்றும் திருப்பூர் நண்பர்கள் குழுவின் காவடியாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.திருவிழாவில் இன்று பரிவேட்டையும், நாளை தெப்போற்சவமும் நடக்கிறது. 13ம் தேதி நடராஜர் தரிசனக்காட்சியும், திருவிழா கொடியிறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை