உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நங்கூர போலீசார் அதிரடி மாற்றம்

நங்கூர போலீசார் அதிரடி மாற்றம்

திருப்பூர்: திருப்பூர் மாநகர ஸ்டேஷன்களில், மூன்று ஆண்டுகளாக ஒரே ஸ்டேஷனில் பணியாற்றி வந்த, 141 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.திருப்பூர் மாநகர காவல்துறையில், சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, மகளிர், போக்குவரத்து, மத்திய குற்றப்பிரிவு, குற்ற ஆவண காப்பகம் பிரிவு, சைபர் கிரைம் ஆகிய ஸ்டேஷன்களில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருபவர்கள் இடமாற்றம் செய்யப்படாமல் இருந்தனர். ஒவ்வொரு ஸ்டேஷன்களிலும் 'நங்கூரம்' பாய்ச்சி அமர்ந்திருந்த போலீசார் சிலர் மீது, கட்டப்பஞ்சாயத்து செய்வது, பணிகளை முறையாக செய்யாமல் வலம் வருவது, உயரதிகாரிகளின் உத்தரவுகளை பின்பற்றாதது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.கடந்த பத்து நாட்கள் முன்பு ஒவ்வொரு ஸ்டேஷன்களிலும், மூன்று ஆண்டுகளை கடந்து பணியாற்றி வருபவர்களின் விபரங்கள் கேட்டு பெறப்பட்டு பட்டியல் தயார் செய்யப்பட்டது.இந்நிலையில், மாநகரில், மூன்று ஆண்டுகளை கடந்து பணியாற்றி வரும், எஸ்.எஸ்.ஐ., முதல் போலீசார் வரை உள்ள, 141 பேரை திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இடமாற்றம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.

கண்காணிக்ககமிஷனர் உத்தரவு

''மாறுதல் செய்யப்பட்ட ஸ்டேஷன்களில் பணிகளில் போலீசார் உடனடியாக இணைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்டவர்கள், 'டூயிங் டியூட்டி' என்ற பெயரில் பழைய ஸ்டேஷன்களில் மீண்டும் பணி அமர்த்தக்கூடாது. இதை துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள் கண்காணிக்க வேண்டும்'' என்று கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !