மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
25-Jan-2025
உடுமலை; உடுமலை ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படைகளுக்கான தகுதி தேர்வு மற்றும் பள்ளி மாணவர்களுக்கான, 'ஏ'சான்றிதழ் தேர்வு நடைபெற்றது.தமிழ்நாடு பெண்கள் பட்டாலியன் பிரிவு கமாண்டிங் ஆபிஸர் லெப்டினன்ட் கர்னல் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. பயிற்சியாளர்கள் சுபேதார் ஆர்.பி.,சிங், ஹவல்தாரர்கள் வினோத்குமார், கோவிந்தராஜ், ரஞ்சன் குழுவினர் தேர்வை ஒருங்கிணைத்தனர்.ராணுவம் சம்பந்தப்பட்ட பாடங்களில் இருந்து, 140 மதிப்பெண்களுக்கு எழுத்துத்தேர்வு நடந்தது. செய்முறைத்தேர்வானது, 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது.தேர்வில், 138 மாணவியர் பங்கேற்றனர்; திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி மாணவியர் 48 பேர்; பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 42; ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் 48 பேர் பங்கேற்றனர்.தேசிய மாணவர்கள் படை அலுவலர்கள் சந்திரா, லதாமாதேஸ்வரி பங்கேற்றனர். தேர்விற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை முதன்மை அலுவலர் நர்மதா செய்திருந்தார்.
25-Jan-2025