தேசிய வாள் சண்டை 2 மாணவர் தேர்வு
திருப்பூர்: கன்னியாகுமரியில் மாநில வாள்சண்டை போட்டி, டிச., 28 மற்றும், 29 ம் தேதி நடந்தது. திருப்பூரை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற இருவர் தேசிய வாள்சண்டை போட்டிக்கு தேர்வாகினர். ஜன., 9 முதல், 11 வரை மூன்று நாட்கள் உத்தரகாண்டில் தேசிய வாள்சண்டை போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற வர்ஷினி, மவுரீஸ் இருவரும், 17 வயது, 'பாயில்' குழு பிரிவில் மூன்றாமிடம் பெற்றனர். தேசிய போட்டியில் மூன்றாமிடம் பெற்ற திருப்பூர் மாணவர்களை, திருப்பூர் மாவட்ட வாள் விளையாட்டு கழக நிர்வாகிகள் பலரும் பாராட்டினர்.