தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு
திருப்பூர்; சர்தார் வல்லபபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று தேசிய ஒற்றுமை தின உறுதி மொழியேற்கப்பட்டது. கலெக்டர் கிறிஸ்து ராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ஜெயராமன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். 'நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன்.நல்லியல்புகளை நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கையாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வை பேணுவேன்,' என உறுதிமொழியேற்கப்பட்டது.