உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மகாகனி கன்றுகளால் இயற்கை இனிக்கும்

மகாகனி கன்றுகளால் இயற்கை இனிக்கும்

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், சோமனுார் அருகே, 1,030 மகாகனி மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், விவசாய நிலங்களில் மரக்கன்று நட்டு வளர்க்கப்படுகிறது. ஆர்வமுள்ள விவசாயிகள் தெரிவித்தால், குழி வெட்டி, மரக்கன்று இலவசமாக நட்டு கொடுக்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் அமைத்து, தண்ணீர் விட்டு பராமரித்தால் போதும்.அதன்படி, 11வது திட்டம் கடந்த வாரம் துவங்கி, மாவட்டம் முழுவதும் மரக்கன்று நடும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சோமனுார், குமரன் நகர் அருகே ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 1,030 மகாகனி மரக்கன்றுகள் நடப்பட்டன.மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை