மேலும் செய்திகள்
மகர நோன்பு: அம்பு விடுதல் விழா
13-Oct-2024
திருப்பூர்: விஜயதசமியில், அரக்கனை வதம் செய்ததை நினைவு கூறும் வகையில், கோவில்களில் வில்அம்பு சேவை நடத்தப்படுகிறது.நவராத்திரியில் ஒன்பது நாட்கள் விரதம் இருந்த அம்பிகை, பத்தாவது நாளில் மகிஷாசுரனை வதம் செய்ததாக, புராணங்கள் கூறுகின்றன. அவ்வகையில், பத்தாவது நாளான நேற்று, வில் அம்பு சேவை நடந்தது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று மாலை வில் அம்பு சேவை நடந்தது.வன்னிமர இலைகளால் பந்தல் அமைத்து, அதற்குள் வாழை மரத்தை கட்டி வைத்து, சிவாச்சாரியார்கள் வில், அம்புடன் வேடம் தரித்து வந்து, வாழை மரத்தின் மீது அம்பு செலுத்தி, தீபாராதனை செய்தனர். அதைத் தொடர்ந்து, வெள்ளை குதிரை வாகனத்தில், சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்துடன், திருவீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நவராத்திரி வழிபாடு நடந்து வந்த கோவில்களில், நேற்று நடந்த வில் அம்பு சேவையுடன், விழா நிறைவடைந்தது. வீடுகளிலும், மறுபூஜையுடன், கொலு வழிபாடு நேற்று பூர்த்தியடைந்தது. இன்று பெருமாள்கோவிலில்...
திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், இன்று மாலை, வில் அம்பு சேவை பூஜை மற்றும் சுவாமி திருவீதியுலா நிகழ்ச்சி நடக்க உள்ளது.
13-Oct-2024