ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தில் நவராத்திரி விழா துவங்கியது
திருப்பூர், அவிநாசி, குமார்நகரில், ஸ்ரீசிருங்கேரி சங்கரமடம் உள்ளது;ஸ்ரீசாரதாம்பாள் கோவிலும் அமைந்துள்ளது. கோவிலில், 38 ம் ஆண்டு நவராத்திரி விழா, மஹா அபி ேஷகம், மஹா மங்கள ஆரத்தியுடன் நேற்று துவங்கியது. இன்று முதல், அக்., 1 ம் தேதி வரை, காலை மற்றும் மாலை நேரத்தில், லட்சார்ச்சனை, வேத பாராயணம், தேவி மஹாத்மிய பாராயணம், நவாவரண பூஜைகள் நடக்க உள்ளது. தினமும், காலை, 11:30 மணிக்கும், இரவு, 8:30 மணிக்கும், மஹா மங்கள ஆரத்தி நடைபெற உள்ளது. வரும், அக்., 2ம் தேதி விஜயதசமி சிறப்பு பூஜையும், இரவு, 7:00 மணிக்கு சாகம்பரி அலங்காரமும், மங்கள ஆரத்தியும் நடக்கிறது.