உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பஸ் ஸ்டாண்ட் வேண்டும்

 பஸ் ஸ்டாண்ட் வேண்டும்

உடுமலை: உடுமலை அருகே தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், பஸ்கள் நிறுத்த இடமின்றி அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு பஸ் ஸ்டாண்ட் அமைப்பது அவசியமாகிறது. உடுமலை, பொள்ளாச்சி தாலுகா எல்லையில் தேவனுார்புதுார் ஊராட்சி உள்ளது. இந்த இரண்டு தாலுகாவிலிருந்தும் பல்வேறு கிராமங்களிலிருந்து டவுன் பஸ்கள் இந்த ஊருக்கு செல்கின்றன. ஆனால், அங்கு பஸ்கள் நிறுத்த பஸ் ஸ்டாப் மட்டுமே உள்ளது. இதனால், பஸ் நிறுத்த இடமில்லாமல் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, போக்குவரத்து பாதிப்பை தடுக்க அங்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்க ஊராட்சி நிர்வாகமும், உடுமலை ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை