உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விளைச்சல் அதிகரிப்பால் சரிந்த விலை: நேந்திரன் வாழை விவசாயிகள் கவலை

விளைச்சல் அதிகரிப்பால் சரிந்த விலை: நேந்திரன் வாழை விவசாயிகள் கவலை

பொங்கலுார்;விளைச்சல் அதிகரிப்பால் நேந்திரன் வாழை விலை சரிந்துள்ளது வாழை விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர், கோவை மாவட்டங்களில் கணிசமான விவசாயிகள் நேந்திரன் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் மழை குறைவாக பெய்ததால் வாழை சாகுபடி பரப்பும் குறைந்துள்ளது. இந்நிலையில் விலை உயர்வு ஏற்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர்.இதற்கு நேர்மாறாக விலை சரிந்துள்ளது. இது நேந்திரன் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, நேந்திரன் வாழை சாகுபடி செய்த சிலர் விவசாயிகள் கூறியதாவது:கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து நேந்திரன் வாழை அதிக அளவில் வரத்து உள்ளது. வெளியூர் வரத்து அதிகரிப்பால் நேந்திரன் வாழைக்காய் விலை சரிய துவங்கி உள்ளது. கடந்த ஆண்டு கிலோ, 50 ரூபாய்க்கு விலை போனது.தற்போது கிலோ, 22 ரூபாய்க்கே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில் விற்பனை விலை கடந்த ஆண்டை விட பாதிக்கும் மேல் குறைந்துள்ளது. இதனால் உற்பத்தி செலவை கூட ஈடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்