உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெட் படம் வண்டல் மண் அள்ள அனுமதி :விவசாயிகள் எதிர்பார்ப்பு: தூர்வார அச்சாரம்

நெட் படம் வண்டல் மண் அள்ள அனுமதி :விவசாயிகள் எதிர்பார்ப்பு: தூர்வார அச்சாரம்

திருப்பூர்:தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் பரமசிவம், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்துள்ள மனு:கோடை காலங்களில் குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுப்பதால், நீர் நிலைகள் துார்வாரப்படுவதோடு, விவசாயிகளுக்கும் இயற்கை உரம் கிடைக்கிறது. அதனாலேயே தமிழக அரசு, நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அரசாணை வெளியிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால், உடுமலை தாலுகாவில், சர்க்கார்புதுார் பீச்சான் குட்டை, ரெட்டியபாளையம், பெரியவாளவாடி நடுக்குட்டை, சப்டியார் குட்டை, பெரிசனம்பட்டி மாரியம்மன் கோவில் குட்டை, மங்களாபுரம், பாப்பானுாத்து செங்குட்டை, தேவனுார் புதுார் நவகிரக பள்ளக்குட்டை, உடுக்கம்பாளையம் கோவில் குட்டை உள்ளிட்ட பல்வேறு குட்டைகளில் மண் எடுக்க முடியும்; குட்டைகளில் வண்டல் மண் எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனுமதி வழங்கவேண்டும்.இவ்வாறு, அதில் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ