மேலும் செய்திகள்
6 மாதத்திற்கு பின் சி.இ.ஓ., நியமனம்
4 hour(s) ago
திருப்பூர்: 'ஒவ்வொரு பள்ளியிலும் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி கற்றுத்தரப்படும். கல்வியாண்டில் சிறந்த இடத்தை திருப்பூர் கல்வி மாவட்டம் பெற அனைத்து முயற்சிகளும் உத்வேகத்துடன் மேற்கொள்ளப்படும்,' என, முதன்மை கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் தெரிவித்தார். கோவை மாவட்ட கல்வி அலுவலராக இருந்த புனித அந்தோணியம்மாள், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டார். நேற்று முன்தினம் இரவு அறிவிப்பு வந்த நிலையில், புதிய சி.இ.ஓ., நேற்று மாலை திருப்பூர் கலெக்டர் அலுவலக ஐந்தாவது தளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட கல்வி அலுவலர் காளிமுத்து மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், ''ஒவ்வொரு பள்ளியிலும் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி கற்றுத்தர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பொதுத்தேர்வில் கூடுதல் தேர்ச்சி சதவீதம் எட்டுவதற்கான பணிகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் தரப்படும். நடப்பு கல்வியாண்டில் சிறந்த இடத்தை திருப்பூர் கல்வி மாவட்டம் பெறும்; அதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் ஆசியர்கள் ஒத்துழைப்பு, உத்வேகத்துடன் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
4 hour(s) ago