உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயில்வே ஸ்டேஷனில் புதிய எஸ்கலேட்டர் 

ரயில்வே ஸ்டேஷனில் புதிய எஸ்கலேட்டர் 

திருப்பூர், : ரயில் பயணிகள் வசதிக்காக ரயில்வே ஸ்டேஷன் இரண்டாவது பிளாட்பார்மில் புதிய எஸ்கலேட்டர் நிறுவும் பணி நடந்து வருகிறது.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பார்மில் காத்திருப்பு அறை அருகே எஸ்கலேட்டர் ஒன்று உள்ளது. 2வது பிளாட்பார்மில், குறிப்பாக, ஈரோடு, சேலம் மார்க்கமாக செல்லும் ரயில்களில் அதிகளவு பயணிகள் பயணிப்பதால், இரண்டாவது பிளாட்பார்மில் ஒரு எஸ்கலேட்டர் நிறுவும் பணி துவங்கப்பட்டுள்ளது.ரயில்வே ஸ்டேஷன் வெளிவளாகம், டூவீலர் ஸ்டாண்ட் அருகே இருந்து நேரடியாக ஸ்டேஷனுக்குள் வரும் வகையில் இந்த எஸ்கலேட்டர் நிறுவப்பட்டு வருகிறது.ரயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'ரயில்வே ஸ்டேஷனுக்குள் பலரும் வேகமாக வருகின்றனர். நுழைவு வாயில்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டாலும், ஒரு பிளாட்பார்மில் இருந்து மற்றொரு பிளாட்பார்முக்கு எளிதாக பயணிகள் சென்று சேருவது முக்கியம்; அப்போது தான் கூட்டம் ஓரிடத்தில் சேராது. சிரமம் இருக்காது.ரயில் விட்டு இறங்கி, வெளியேறும் போது பலரும் வேகம் காட்டுவதில்லை. ரயில் பிடிக்கும் அவசரத்தில் தான் முந்துகின்றனர். இதனால், தற்போது நிறுவப்படும் எஸ்கலேட்டரும் மேல்நோக்கி பயணிகளை அழைத்துச் செல்லும் வகையில் கட்டமைக்கப்படுகிறது. மார்ச் மாதத்துக்குள் எஸ்கலேட்டர் பணி நிறைவு பெற்று, செயல்பாட்டுக்கு வரும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி