உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இலங்கை தமிழர் முகாமில் புதிய வீடுகள் திறப்பு

இலங்கை தமிழர் முகாமில் புதிய வீடுகள் திறப்பு

உடுமலை; திருமூர்த்திநகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், புதிதாக கட்டப்பட்ட, 35 வீடுகள் திறப்பு விழா நடந்தது.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி நகரில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், ரூ. 1.76 கோடி மதிப்பில், 35 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக, திறந்து வைத்தார்.திருமூர்த்தி நகரில் நடந்த விழாவில், அமைச்சர் கயல்விழி, பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மலர்விழி, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை