உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சியில் புதிய அலுவலர்கள்

மாநகராட்சியில் புதிய அலுவலர்கள்

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியில் புதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பெருமளவு காலிப்பணியிடங்கள் இருந்தன. அனைத்து பிரிவுகளிலும் பணிகள் தாமதமும்; கூடுதல் பணிப்பளுவால் பணியாற்றும் அலுவலர்கள் சிரமத்துக்கு ஆளாவதும் காணப்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தேவையான பணியிடங்களை நிரப்ப கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது மாநகராட்சிக்கு பல்வேறு பிரிவுகளில் புதிய அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சி கவுன்சில் செயலாளராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். பொறியியல் பிரிவில் இளம்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்கள் 20 பேர்; சுகாதார பிரிவில் சுகாதார அலுவலர்கள் 15 பேர்; தொழில்நுட்ப உதவியாளர்கள் 9 பேர் மற்றும் பட வரைவாளர்கள் 4 பேர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அலுவலர்கள் தங்கள் பணியிடங்களில் இணைந்துள்ளனர். நேற்று நடந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் புதிய அலுவலர்களை மேயர் தினேஷ்குமார் அறிமுகப்படுத்தினார். மாநகராட்சி அலுவலகப் பணிகள் முன்னர் இருந்ததை விட மேலும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை