உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதிய வந்தே பாரத் ரயிலுக்கு மலர் துாவி உற்சாக வரவேற்பு

புதிய வந்தே பாரத் ரயிலுக்கு மலர் துாவி உற்சாக வரவேற்பு

திருப்பூர்: திருப்பூர் வந்த, எர்ணாகுளம் - பெங்களூரு சிறப்பு வந்தே பாரத் ரயிலுக்கு மலர் துாவி, வந்தே மாதரம் கோஷம் எழுப்பி கட்சியினர், பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாடு முழுதும், நான்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை, பிரதமர் வாரணாசியில் இருந்து நேற்று காலை துவங்கி வைத்தார். அதில் ஒன்றான எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரயில் (எண்: 06552) நேற்று காலை, 8:00 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டது. மதியம், 12:48 க்கு திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. இரண்டாவது பிளாட்பார்மில் வந்தே பாரத் ரயிலுக்கு மலர் துாவி கட்சியினர், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். வந்தே பாரத் புதிய ரயில் பெட்டிகளில் ஏறி, பயணிகள் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். இன்ஜின் முன் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். இன்ஜின் பெட்டிக்குள் ஏறியவர்களை ரயில்வே அதிகாரிகள் வற்புறுத்தி இறங்க செய்தனர். சில நிமிடம் சலசலப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு பெட்டியிலும் இருந்த பாதுகாப்பு படை அதிகாரிகள், ரயில் பெட்டிகளில் ஏற முயன்றவர்களை தடுத்து, போட்டோ மட்டும் எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்க வரவேற்பு நிகழ்ச்சியில், சேலம் கோட்ட முதுநிலை மின்பொறியாளர் அனிஷ் சந்திர மண்டல், திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், பா.ஜ. வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், மாநில செயலாளர் மலர்க்கொடி, லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொது செயலாளர் மோகனசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ