உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதிய தண்ணீர் மீட்டர் கிராமத்தில் சலசலப்பு

புதிய தண்ணீர் மீட்டர் கிராமத்தில் சலசலப்பு

பல்லடம் : பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சியில், 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அத்திக்கடவு, பில்லுார் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் கீழ் இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அத்திக்கடவு பிரதான குழாயில் இருந்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்படுவதை கண்காணிக்க, பல்வேறு இடங்களில் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக, மீட்டர்கள் அகற்றப்பட்டு, புதிய மீட்டர்கள் பொருத்தும் பணி ஊராட்சி முழுவதும் நடந்து வருகிறது. இதற்கிடையே, புதிய மீட்டர்களால், சர்ச்சை எழுந்துள்ளது. கிராம மக்கள் கூறியதாவது: குடிநீருக்கான பழைய மீட்டர்கள் அனைத்தையும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மாற்றி வருகின்றனர். இங்குள்ள, 65 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி ஒன்றுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டதை பரிசோதித்த போது, மீட்டரில், 79 ஆயிரம் லிட்டர் வினியோகிக்கப்பட்டதாக காட்டியது. ஆனால், அதேநேரம், நீர்த்தேக்க தொட்டியில் சரி பார்த்தபோது, 42 ஆயிரம் லிட்டர் குடிநீர் மட்டுமே இருந்தது. எனில், 39 ஆயிரம் லிட் டர் குடிநீர் எங்கு சென்றது என்றே தெரியவில்லை. இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, சரிபார்ப்பதாக மட்டும் தெரிவித்தனர். பழைய மீட்டர்கள் இருந்தவரை இந்த பிரச்னை இல்லை. புதிதாக பொருத்தப்பட்டு வரும் மீட்டரில், கூடுதல் அளவு குடிநீர் சப்ளை செய்யப்பட்டதாக காட்டுவதால் சந்தேகம் உள்ளது. பல்வேறு ஊராட்சிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மீட்டரில் கூடுதல் அளவு குடிநீர் வினியோகிக்கப்படுவதாக காட்டுவது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. எனவே, புதிதாகப் பொருத்தப்பட்டு வரும் மீட்டர்களின் தரம், செயல்பாடு ஆகியவை குறித்து பரிசோதிக்க வேண்டும். அதுவரை, புதிய மீட்டர்கள் பொருத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை