உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 2025 புத்தாண்டு பிறந்தது; பொதுமக்கள் உற்சாகம்

2025 புத்தாண்டு பிறந்தது; பொதுமக்கள் உற்சாகம்

திருப்பூர்; ஆங்கிலப் புத்தாண்டான, 2025ம் ஆண்டை வரவேற்க, நேற்று முன்தினம் இரவு மக்கள் தயாராகினர். புதிய ஆண்டு நலமும், வளமும் நிறைந்த ஆண்டாக இருக்க வேண்டும் என்ற நேர்மறை எண்ணத்துடன், மக்கள் புத்தாண்டை எதிர்கொண்டனர்.பொதுமக்கள் பலர், தங்கள் வீடுகளிலும், பல்வேறு இடங்களில் குடியிருப்போர் நலச்சங்கங்கள், தாங்கள் சார்ந்த வீதி, தெருக்களிலும், கேக் வெட்டி, பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்றனர். திருப்பூரில் உள்ள ஓட்டல், ரிசார்ட்டகளில் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; சிறப்பு இரவு உணவு, இசை உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழிபாட்டு தலங்கள்

கிறிஸ்தவ தேவாலயங்களில், புத்தாண்டை வரவேற்கும் விதமாக, நள்ளிரவு, 12:00 மணிக்கு சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடத்தப்பட்டது. இத்திருப்பலியில், 'கடந்தாண்டு முழுக்க இறைவன் செய்த நன்மைக்கு நன்றி சொல்லும் விதமாகவும், வரும், புத்தாண்டில் அனைத்து வளங்களும் கிடைக்க வேண்டும்' என்ற வேண்டுதல் முன்வைக்கப்பட்டது. புத்தாண்டையொட்டி, தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் ஜொலித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி