உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சைமா சங்க தேர்தல்  இன்று வேட்புமனு தாக்கல்

சைமா சங்க தேர்தல்  இன்று வேட்புமனு தாக்கல்

திருப்பூர்; தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தின் (சைமா) 69வது மகாசபை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. பொதுச்செயலாளர் கோவிந்தப்பன் ஆண்டறிக்கையை தாக்கல் செய்தார். தலைவர் ஈஸ்வரன், சங்கத்தின், 20 ஆண்டுகால பணிகள் குறித்து பேசினார். பொருளாளர் சுரேஷ்குமார், வரவு செலவு அறிக் கையை சமர்ப்பித்தார். துணை தலைவர் பாலசந்தர், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார். சங்கத்தில் தேர்தல் நடத்தி, 2025-26, 2026 -27, 2027 -28 ஆகிய ஆண்டுகளுக்கு, நிர்வாகிகளை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வழக்கறிஞர் ராமமூர்த்தி, தேர்தல் அதிகாரியாக நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பஞ்சு விலையை சீராக வைக்க வேண்டும்; பின்னலாடை தொழிலுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். திருப்பூரின் நெருக்கடியை குறைக்க, மாவட்ட எல்லையில் தொழிற்பூங்கா அமைக்க வேண்டும். தொழிற்பூங்காவில், தொழிலாளர் தங்கும் வசதியையும் செய்ய வேண்டும். தொழிற்திறன் மேம்பாட்டுக்கு, பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று துவக்கம் சங்கத்தில் புதிய நிர்வாகக்குழுவை தேர்வு செய்ய, தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்றும், நாளையும், சங்க அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நடக்கிறது. வரும், 21ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். 23ம் தேதி மாலை, 5:00 மணி வரை, வேட்பு மனு வாபஸ் பெற அவகாசம் வழங்கப்படுகிறது. வரும், 27ல் ஓட்டுச்சீட்டு அச்சிட்டு, 29ம் தேதி காலை, 9:00 முதல், மதியம், 1:00 மணிக்குள் தேர்தல் நடத்துவது என்று அறிவிக்கப்பட்டுள்ளது பொறுப்புகளுக்கு, போட்டி இருக்கும்பட்சத்தில், ஓட்டுப்பதிவு நடத்தப்படும். அன்றே, தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை