மேலும் செய்திகள்
கிளீனர் கொலை; டிரைவர் கைது
04-Nov-2024
கொள்ளையடிக்க திட்டம்; போலீசில் சிக்கிய வாலிபர்
17-Oct-2024
பல்லடம்; ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுந்தர் கோச்சாவின் மகன் கணேஷ் 5. காரணம்பேட்டையில் உள்ள தனியார் மில் ஒன்றில் தங்கி வேலை பார்க்கிறார். கடந்த, 6ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கணேஷ், திடீரென மாயமானார். இதுகுறித்து சுந்தர் மனைவி பீலா கோச்சா அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த பல்லடம் போலீசார், மறுநாள், வீட்டின் அருகே உள்ள புதரில், கணேஷை சடலமாக மீட்டனர். விசாரணையில், நேற்று கண்டூர்தாஸ் மகன் கண்ணுதாஸ் 31 என்பவரை, போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'பீலா கோச்சாவுக்கு, இரண்டு கணவர்கள் உள்ளனர். மகனுடன் காரணம்பேட்டையில் வசித்து வரும் இவருக்கு மற்றொருவருடன் தொடர்பு ஏற்பட்டது. இது, பீலாவுடன் பழகி வந்த கண்ணுதாஸூக்கு பிடிக்கவில்லை. இதற்காக பழி வாங்கும் நோக்கில், சிறுவன் கணேஷை மூச்சு திணற வைத்து கொலை செய்து புதருக்குள் வீசியுள்ளார். விசாரணையில் இதனை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
04-Nov-2024
17-Oct-2024