வனத்துறையை கண்டித்து போராட்டம் அறிவிப்பு
உடுமலை; உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகளில் காட்டுப்பன்றிகளால் தொடர் சேதம் ஏற்பட்டு வருகிறது.மேலும், பொன்னலம்மன்சோலை உள்ளிட்ட மலையோர கிராமங்களில், குரங்குகளால், தென்னை சாகுபடியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. வனவிலங்குகளை வனத்துக்குள் விரட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.'இப்பிரச்னைகள் குறித்து வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை; வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கு நிவாரணமும் கிடைப்பதில்லை,' என விவசாயிகள் தொடர் புகார் தெரிவித்து வருகின்றனர்.வனத்துறையினரின் அலட்சியத்தைக்கண்டித்தும், மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்,உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் விவசாயிகள் சார்பில், நாளை (5ம் தேதி) உடுமலை மாவட்ட வன அலுவலகத்தில் காலை, 10:00 மணி முதல் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.