மேலும் செய்திகள்
நாளை தேசிய அடைவு தேர்வு
03-Dec-2024
உடுமலை: ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சேர்க்கைக்கான, அகில இந்திய சைனிக் பள்ளிகளின் நுழைவுத்தேர்வுக்கு வண்ணப்பிக்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.புதிய கல்வியாண்டு, 2025 - 26க்கான சைனிக் பள்ளிகளில் ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவு தேர்வுக்கு டிச., 24ம் தேதி முதல் இணையதள இணைப்பில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.விண்ணப்பதாரர்கள் https://exams.nta.ac.in/AISSEE/ என்ற இணையதள இணைப்பில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். வரும் 2025 ஜன., 13 மாலை, 5:00 மணி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.ஆறாம் வகுப்பு சேர்க்கைக்கு, மாணவர்களுக்கு 2025 மார்ச் 31ல் 10 முதல் 12 வயதுக்குள் இருக்க வேண்டும்.ஒன்பதாம் வகுப்பு சேர்க்கைக்கு, 2025 மார்ச் 31ல் 13 முதல் 15 வயதுக்குள் இருப்பதுடன், சேர்க்கையின்போது அங்கீகரிக்கப்பட்ட பள்ளியிலிருந்து, எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.முழுமையான விபரங்களை, அகில இந்திய சைனிக் பள்ளிகள் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இத்தகவலை, உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
03-Dec-2024