உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காலமுறை ஊதியத்தில் பணி நிரப்ப சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல்

காலமுறை ஊதியத்தில் பணி நிரப்ப சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல்

- நிருபர் குழு -பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் ஒன்றியத்தலைவர் எலிசபெத் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்றியச்செயலாளர் ஆனந்தி பேசினார்.தமிழகம் முழுவதும், 9,800 சமையலர் பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில் நிரப்பிடும் வகையில் வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து, காலமுறை ஊதியத்தில் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.மேலும், 63 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருப்பூர் மாவட்ட இணைச்செயலாளர்கள் வைரமுத்து, ஈஸ்வரி, பொருளாளர் தங்கபாண்டியன், சத்துணவு ஊழியர் சங்க குடிமங்கலம் வட்டார துணைத்தலைவர் கவுரி, ஒன்றிய பொருளாளர் ஷகிலாபானு உட்பட பலர் பங்கேற்றனர். இதே போல், குடிமங்கலத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம் முன் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய தலைவர் கீதா தலைமை வகித்தார். செயலாளர் யசோதா, கோரிக்கைகளை விளக்கி பேசினார்.மாவட்ட துணை தலைவர் சுப்ரமணியம் பங்கேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பொள்ளாச்சி அரசு ஊழியர்கள் சங்க இணைச் செயலாளர் கிட்டு, தலைவர் பத்மநாபன், செயலாளர் மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். சத்துணவு ஊழியர் சங்க பொருளாளர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி