உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சத்துணவு ஊழியர் விபத்தில் பலி

சத்துணவு ஊழியர் விபத்தில் பலி

தாராபுரம்: மூலனுார், ரங்கபாளையத்தை சேர்ந்தவர் குள்ளம்மாள், 60. தேர்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு உதவியாளர். உறவினர் சுப்ரமணி, 65 என்பவருடன் டூவீலரில் தாராபுரம் - ஒட்டன்சத்திரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். ராம் நகர் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார் டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த, இருவரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் குள்ளம்மாள் இறந்தது தெரிந்தது. தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ