உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

தாராபுரம்:நீதிமன்ற தீர்ப்பின் படி ஓய்வூதியம் வழங்க கோரி, சத்துணவு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் சுஜாதா தலைமை தாங்கினார்.நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், 7,850 ரூபாய் ஓய்வூதியமாக வழங்க, 110 விதியின் கீழ் உத்தரவிட வலியுறுத்தினர். சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஜெயந்தி, பத்மா உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை