மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்புகளால் நீர்நிலைகள் கபளீகரம்
02-Feb-2025
பல்லடம்; ''பல்லடம் நகராட்சி ஓடையை ஆக்கிரமித்து, சடலங்களை புதைத்து வருகின்றனர். தொடர்ச்சியாக புகார் அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர், பல்லடம் தாசில்தாரிடம் புகார் மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:பல்லடம் நகராட்சி வழியாக செல்லும் நீரோடை நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு, ஓடையின் ஒரு பகுதியில், நீண்ட காலமாக ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் சடலங்களை புதைத்து வருகின்றனர். அருகிலேயே அவர்களுக்கு சொந்தமான சுடுகாடு இருக்கும்போது, அத்துமீறி ஓடையில் புதைக்கின்றனர். ஒவ்வொரு முறையும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது.துக்க நிகழ்ச்சிக்கு வருபவர்களுடன் நாங்கள் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டிய வேதனையான சூழல் ஏற்படுகிறது. வருவாய்த்துறையினரே இதற்குக் காரணம். கடந்த காலங்களில் இது தொடர்பாக பலமுறை சுட்டிக்காட்டியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதேபோல், பச்சாபாளையம் பகுதியிலும் ஓடையை தனியார் நிறுவனத்தினர் ஆக்கிரமித்து பாதை அமைத்து வருகின்றனர்.ஓடையை மீட்டு கம்பி வேலி அமைக்க வேண்டும். மாற்று இடத்தில் சுடுகாடு வசதி ஏற்படுத்தி தருவதுடன், எதிர்காலத்தில் ஓடையை ஆக்கிரமிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட தாசில்தார் சபரிகிரி, ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
02-Feb-2025