உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய அலுவலர்கள்

கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய அலுவலர்கள்

திருப்பூர்; வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பான 'பெரா' சார்பில், தமிழகம் முழுவதும் கடந்த 25 முதல், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் புறக்கணிப்பு துவங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 700 பேர், முகாம் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை பரிசீலனை செய்ய உரிய அவகாசம் வழங்க வேண்டும், தொடர்ச்சியாக முகாம் நடத்துவதை தவிர்க்கவேண்டும் என்பது உள்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் வருவாய்த்துறையினர் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியபடி, வழக்கமான அலுவல் பணிகளை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை