மேலும் செய்திகள்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் கைத்தொழில் பயிலரங்கம்
07-Aug-2025
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், அனைத்து அரசு துறை அலுவலர்களுக்கான ஆட்சி மொழி பயிலரங்கம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இரண்டு நாட்களும், காலை, 10:00 மணி முதல் மாலை, 5:45 மணிவரை பயிலரங்கம் நடைபெறும். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர், மாவட்ட அளவிலான அலுவலர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்று பேசுகின்றனர். இதில் பங்கேற்கும் அரசு அலுவலர்களுக்கு, ஆட்சி மொழி வரலாறு, சட்டம், அலுவலக குறிப்புகள், ஆணைகளை தமிழில் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிலரங்கில் ஒவ்வொரு அலுவலகத்திலிருந்தும், அலுவலர் அல்லது கண்காணிப்பாளர் ஒருவர்; பணியாளர் நிலையில், உதவியாளர், இளநிலை உதவியாளர் அல்லது தட்டச்சர் ஒருவர் என, மொத்தம் இரண்டு பேர் பங்கேற்கவேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
07-Aug-2025