ஆம்னி பஸ்கள் நிறுத்தம்; போக்குவரத்து நெரிசல்
உடுமலை; உடுமலை பை-பாஸ் ரோட்டில், இரவில் நிறுத்தப்படும் ஆம்னிபஸ்களால் போக்கவரத்து நெரிசல் ஏற்படுகிறது.உடுமலையில் இருந்து சென்னை உட்பட தொலைதுார பகுதிகளுக்கு, 25க்கும் அதிகமான 'ஆம்னி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும், இரவு 8:00 மணிக்கு மேல், பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலை ஒட்டி, பை-பாஸ் ரோட்டில் நிறுத்தப்படுகின்றன.பயணியர் ஏறும் வரை வரிசையாக, நிறுத்தப்படும் 'ஆம்னி' பஸ்களால், அவ்வழியாக பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இரவு நேரங்களில், பை-பாஸ் ரோட்டில், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகி விட்டது.இப்பிரச்னைக்கான தீர்வு குறித்து, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார், ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்த்துள்ளனர்.