ஏலச்சீட்டு மோசடி; ஒருவர் கைது
திருப்பூர் : திருப்பூர், பல்லடம் ரோடு, வீரபாண்டி பிரிவை சேர்ந்தவர் ராம்குமார், 42. இவர் குரு நட்சத்திரா சீட்ஸ் என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார்.இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் சேர்ந்து தினம், வாரம், மாதம் என்ற வகையில் பணம் கட்டி வந்தனர். 50க்கும் மேற்பட்டோரிடம், 25 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்தார்.சீட்டு முடிந்த பின்னும், பணத்தை திருப்பி கொடுக்காமல் ராம்குமார் தலைமறைவானார். இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருப்பூர் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தனர்.இதுதொடர்பாக, திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்தனர். சீட்டு மோசடியில் ஈடுபட்ட ராம்குமாரை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும், கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் சீட்டு கட்டி பணத்தை பெறாமல் உள்ள நபர்கள், மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.