உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 10 கிலோ கஞ்சா பறிமுதல் படியூரில் ஒருவர் கைது

10 கிலோ கஞ்சா பறிமுதல் படியூரில் ஒருவர் கைது

திருப்பூர்: படியூரில் கஞ்சா விற்பனை நடப்பதாக தாராபுரம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். பேக்கரி அருகே சந்தேகப்படும் வகையில் டிராவல் பேக்குடன் ஒருவர் நின்றிருந்தார். போலீசார் அவரிடம் விசாரித்தனர். சேலம், தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த ஹானஸ்ட்ராஜ், 31 என்பதும், தற்போது நாச்சிபாளையத்தில் தங்கியிருப்பதாக தெரிவித்தார். அவரின் பேக்கை சோதனை செய்த போது, கஞ்சா பொட்டலம் இருப்பது தெரிந்தது. விற்பனை செய்யும் நோக்கில் ஆந்திர மாநிலம், சித்துாரிலிருந்து வாங்கி வந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், பத்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி