உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆன்லைன் மனு; தீர்வு தேவை

ஆன்லைன் மனு; தீர்வு தேவை

அவிநாசி மின் கோட்ட அலுவலகத்தில், மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. மின்நுகர்வோர் பலரும் பங்கேற்று தங்களது கோரிக்கையை முன் வைத்தனர். தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு, 'ஆன்லைன்' விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.கூட்டமைப்பு சார்பில், முதல்வரின் தனி பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில், ''திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில், மின் அலுவலகங்களில், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பெரும்பாலும் கிடப்பில் போடப்படுகிறது. இணையதள மனுக்களுக்கு, உரிய ரசீது வழங்க வேண்டும்; மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தை பின்பற்றுவதை ஊக்குவிக்கும் வகையில், 'ஆன்லைன்' மனுக்கள் மீதான நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை