உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மங்கையர் மனம் கவர ரம்யம் ஷோரூம் திறப்பு

மங்கையர் மனம் கவர ரம்யம் ஷோரூம் திறப்பு

திருப்பூர்: திருப்பூர் மங்கலம் ரோடு, பாரப்பாளையத்தில், டெலி பிரஷ் அருகில் ரம்யம் ஷோரூம் நேற்று திறக்கப்பட்டது.ேஷாரூமை ராம்ராஜ் குழுமம் இயக்குனர் சுமதி நாகராஜன் துவக்கி வைத்தார். முதல் விற்பனையை வென்ச்சுரா கார்மென்ட்ஸ் ராமசாமி துவக்கி வைத்தார்.ஹீரோ பேஷன் டைரக்டர் பத்மாவதி சுந்தர மூர்த்தி முதல் விற்பனையை பெற்று கொண்டார். விழாவில், 'ராம்ராஜ் காட்டன்' நிறுவனர் நாகராஜன், நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வர், இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின், தலைமை அதிகாரிகள் செல்வகுமார், கணபதி, தம்பி வெங்கடாசலம் ஆகியோர் பங்கேற்றனர். ராம்ராஜ் காட்டன் இயக்குனர்கள் ஆர்த்திகா அருண் ஈஸ்வர், தரணிகா அஸ்வின் ஆகியோர் வரவேற்றனர்.ஷோரூமில் பெண்களுக்கான கோவை காட்டன் சேலைகள், கோரா காட்டன் சேலைகள், ஆர்கானிக் காட்டன் சேலைகள், சந்தேரி காட்டன், பெங்காலி காட்டன், செட்டிநாடு, காதி, லினன், முக்த டசர், டிஸ்சியூ, லினன், வீவிங், பிரிண்ட், சாப்ட் சில்க் என, ஏராளமான சேலை வகைகள் மட்டுமின்றி, டிரஸ் மெட்டீரியல்ஸ், ரெடிமேட் காட்டன் குர்திஸ், அனார்கலி குர்தீஸ், பெண் குழந்தைகளுக்கு பாவாடை செட் போன்றவை இந்த தீபாவளிக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை