உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி யாத்திரை பேரணி; ஓங்கி ஒலித்த பாரத் மாதா கீ ஜே கோஷம்

ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி யாத்திரை பேரணி; ஓங்கி ஒலித்த பாரத் மாதா கீ ஜே கோஷம்

அவிநாசி: 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றி யாத்திரை அவிநாசியில் நேற்று நடந்தது.நம் நாட்டு ராணுவ வீரர்கள், பிரதமருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தேசிய கொடியேந்தி 300க்கும் மேற்பட்டோர், 'பாரத் மாதா கீ ஜே' என்ற கோஷத்துடன் பேரணியில் பங்கேற்றனர்.பேரணி, சேவூர் ரோடு செங்காட்டு திடலில் இருந்து துவங்கியது. பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர், ஹிந்து முன்னணி, அவிநாசி அனைத்து வணிகர்கள் சங்கம், அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கம், அவிநாசி அத்திக்கடவு போராட்ட குழு சமூக நல ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.வெற்றியாத்திரை முன்பு தேசிய கொடி ஏந்தி பாரதமாதா வேடம் அணிந்த சிறுமி; ராணுவ வீரர்உடை அணிந்த சிறுவன்; 'மாதிரி' பிரமோஸ் ஏவுகணையுடன் சிறுவன் உள்ளிட்டோர் வந்தனர். ஏறத்தாழ 2 கிலோ மீட்டர் துாரம், முக்கிய வீதிகளின் வழியாக சென்ற வெற்றியாத்திரை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நிறைவுற்றது.ஆப்பரேஷன் சிந்துார், ராணுவ வீரர்கள் தீரச்செயல்கள் குறித்து பேசினர்.பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.பா.ஜ., கோவை கோட்ட பொறுப்பாளர் பாலகுமார், வடக்கு மாவட்ட தலைவர் கரு மாரிமுத்து, நீலகிரி லோக்சபா பொறுப்பாளர் கதிர்வேலன், சிந்தனையாளர் பிரிவு மாநில செயலாளர் கணியாம் பூண்டி செந்தில், மாவட்ட துணை தலைவர் சண்முகம், மாவட்டபொருளாளர் டாக்டர் சுந்தரன், நகர தலைவர்கள் ரமேஷ், சண்முகபாபு, ஹிந்து முன்னணி மாவட்டச் செயலாளர் கேசவன், அ.தி.மு.க., நகரச் செயலாளர் ஜெயபால், நகர துணைச் செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், அத்திக்கடவு அவிநாசி போராட்டக் குழு சம்பத்குமார், அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமரன், அவிநாசி அனைத்து வணிகர் சங்க தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ