உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஹாக்கி அணியில் விளையாட வாய்ப்பு

ஹாக்கி அணியில் விளையாட வாய்ப்பு

உடுமலை; மாவட்டங்களுக்கு இடையிலான போட்டியில் விளையாட உள்ள, திருப்பூர் மாவட்ட ஹாக்கி அணிக்கான தேர்வு வரும், 6ம் தேதி உடுமலையில் நடக்கிறது.மாவட்டங்களுக்கு இடையிலான ஜூனியர் ஆண்கள், ஹாக்கி போட்டி இம்மாதம், கோவில்பட்டியில் நடைபெற உள்ளது. அந்த போட்டியில், திருப்பூர் மாவட்டம் சார்பில் விளையாட உள்ள அணிக்காக வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கான தேர்வு வரும் 6ம் தேதி காலை, 8:00 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெறுகிறது. தேர்வில் பங்கேற்பவர்கள், 2006ம் ஆண்டு ஜன., மாதத்துக்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.இத்தகவலை திருப்பூர் மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் மோகன்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை