உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வடிகால் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு

வடிகால் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு

கருவம்பாளையம் துவக்கப் பள்ளி ரோட்டில் வடிகால் கட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாநகராட்சி, 43வது வார்டுக்கு உட்பட்ட பகுதி கருவம்பாளையம், துவக்கப்பள்ளி ரோடு உள்ளது. ஏ.பி.டி., ரோட்டிலிருந்து மங்கலம் ரோட்டுக்குச் செல்லும் வகையில் இந்த பகுதி உள்ளது.இந்த வீதியில் நீண்ட காலம் முன், அமைத்த வடிகால் முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது. அப்பகுதியினர் தங்கள் இடத்தில் குழி அமைத்து அதில் கழிவு நீரைத் தேக்கி வைத்து வந்தனர்.புதிய வடிகால் அமைக்க அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில், பொது நிதியில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணி துவங்கிய நிலையில், வடிகால் முறையாக அமைக்கப்படவில்லை என்று கூறி அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.வடிகால் கட்ட தோண்டிய குழிக்குள் இறங்கி நின்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், பணி செய்த ஊழியர்கள் பணியை நிறுத்தி வைத்து விட்டு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.அப்பகுதியைச் சேர்ந்த சுந்தரராஜன் கூறுகையில், ''எங்கள் பகுதியில் ஏற்கனவே வடிகால் இருந்த பகுதியில் புதிய வடிகாலை அமைக்கலாம். அதனை விடுத்து தேவையில்லாமல், ரோட்டின் மறுபுறத்தில் அதிக ஆழமாகவும், ரோட்டைக் கடந்து கல்வெர்ட் அமைத்தும் வடிகால் கட்ட திட்டமிட்டுள்ளனர். தேவையின்றி நிதி வீணாகிறது,'' என்றார்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'அப்பகுதி வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் செல்லும் வகையில், நில அமைப்புக்கு ஏற்ப வடிகால் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் குறுகலான ரோடாக உள்ளதால், வடிகால் மீது மூடியும் அமைக்கப்படும்.இப்பகுதிக்கு பாதாள சாக்கடை வசதி கேட்டுள்ளனர். அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்படும் திட்டத்தில் மட்டுமே இதை இணைக்க முடியும். அதில் இப்பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ