உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கணியூர் பேரூராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு

கணியூர் பேரூராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு

உடுமலை; கணியூர் பேரூராட்சியுடன், ஜோத்தம்பட்டியை இணைப்பதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மடத்துக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஜோத்தம்பட்டி ஊராட்சியை, அருகிலுள்ள கணியூர் பேரூராட்சியுடன் இணைப்பதற்கான அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு, ஜோத்தம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம், ஜோத்தம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. இதில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பதிவு செய்து, பயன்பெறுகின்றனர். விவசாயத்துக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், சிறு, குறு விவசாயிகளும் பாதிப்பு ஏற்படும்.பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டால், ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள், விவசாயிகள் மட்டுமன்றி, சொத்து வரி உள்ளிட்ட வரி இனங்களும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது, என, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஊராட்சி பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு, கணியூர் பேரூராட்சியுடன் ஜோத்தம்பட்டி ஊராட்சியை இணைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிப்பது, என, முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ