உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 4, 5ல் ஷாப்பிங் திருவிழா ஆரஞ்ச் ஸ்கை நடத்துகிறது

4, 5ல் ஷாப்பிங் திருவிழா ஆரஞ்ச் ஸ்கை நடத்துகிறது

திருப்பூர்:ஆரஞ்ச் ஸ்கை நிறுவன இயக்குனர்கள் அனுமித்ரா, அக்ஷயா, அமிர்த வர்ஷினி ஆகியோர் கூறியதாவது: திருப்பூர், தாராபுரம் ரோட்டில் உள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் வரும், 4, 5 ஆகிய தேதிகளில், எங்கள் நிறுவனத்தின் தலை தீபாவளி பேஷன் லைப் ஸ்டைல் ஷாப்பிங் திருவிழா நடக்கிறது. கண்காட்சியில் அனைத்து வகை பேஷன் ஆடை வகைகள், நகைகள், பேன்சி வகைகள், உணவு உள்ளிட்ட பொருட்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நுாற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான பொருட்களைக் காட்சிப்படுத்துகின்றன. இரு நாட்களும், குழந்தைகளுக்கான பெயின்டிங் போட்டிகள், பாடல் பாடுதல், வாடிக்கையாளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிராண்ட்களுக்கு விருதுகள் வழங்கும் 'அவார்ட் நைட்ஸ்' நிகழ்ச்சிகள் நடக்கின்றன. குடும்பங்கள் கொண்டாடும் நிகழ்வாக இருக்கும். மேலும் விபரங்களுக்கு 98401 38026 என்ற எண்ணை அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி