பட்டா வழங்க உத்தரவு; தெற்கு எம்.எல்.ஏ., நன்றி
திருப்பூர்; தெற்கு தொகுதிஎம்.எல்.ஏ., செல்வராஜ் கூறியதாவது:கொங்கணகிரி கோவில் அருகே, 4 ஏக்கர் நிலம் அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில், 40 ஆண்டுக்கும் மேலாக 134 குடும்பத்தினர், வசித்து வருகின்றனர்.நீண்ட காலமாக அவர்கள் அந்த இடத்துக்கு பட்டா கேட்டு போராடி வந்தனர். கடந்த தேர்தலின் போது, அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. சட்டசபை உறுதி மொழி குழு திருப்பூர் வருகையின் போதும் இது குறித்து வலியுறுத்தப்பட்டது. அக்குழுவும் இதற்கு பரிந்துரை செய்தது.அதனடிப்படையில் இந்த இடத்துக்கு அவர்களுக்கு பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர், துணை முதல்வர், வருவாய் துறை அமைச்சர், கலெக்டருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.