உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமைப்பு தின ஊர்வலம்

அமைப்பு தின ஊர்வலம்

திருப்பூர்:இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்.எப்.ஐ.,) 53வது அமைப்பு தின ஊர்வலம் நேற்று மாலை திருப்பூர் குமரன் சிலை முன்பு நடந்தது.மாவட்ட தலைவர் கல்கிராஜ் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஷாலினி வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் மோகனபிரியா, கிருஷ்ணகுமார், ஜோதிபாசு, ஹரி, சபரிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். குமரன் சிலை முன் ஆரம்பித்த ஊர்வலம் குமரன் ரோடு வழியாக அரிசி கடை வீதியில் நிறைவு பெற்றது.தொடர்ந்து, பொதுகூட்டம் நடந்தது. 'நீட்', 'கியூட்' தேர்வுகளை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி