உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / களைகட்டிய நம்ம ஊரு கலைத்திருவிழா

களைகட்டிய நம்ம ஊரு கலைத்திருவிழா

திருப்பூர் : தமிழக அரசின், கலை பண்பாட்டுத்துறை சார்பில், சென்னை சங்கமம் நிகழ்ச்சி வரும், 2026ல் சென்னையில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் சிறப்பான கலைஞர் குழுக்களை தேர்வு செய்யும் நிகழ்வு, ஒவ்வொரு மாவட்ட அளவிலும் நடந்து வருகிறது.அவ்வகையில், திருப்பூர் மாவட்ட கலைஞர்களுக்கான நேர்காணல் மற்றும் கலைக்குழுக்கள் தேர்வு, பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில், 22ம் தேதி துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், காளையாட்டம், பம்பை இசை, கிராமிய பாட்டு உள்ளிட்ட கலைக்குழுக்கள் பங்கேற்றன; முதல் நாளில், 11 குழுக்களை சேர்ந்த, 102 பேர் பங்கேற்றனர்.நேற்று, தெருக்கூத்து, இசைநாடகம், நாடகம், கனியான் கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், கும்மி கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதநாட்டியம், பழங்குடியினர் நடனம் ஆகிய கலைக்குழுவினருக்கு நேர்காணல் நடந்தது. நம்ம ஊரு திருவிழா மாவட்ட பொறுப்பாளர் சரவண மாணிக்கம் ஒருங்கிணைத்தார்.நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவினர் கலைக்குழுவினரின் திறமைகளை ஆய்வு செய்தனர். மொத்தம், ஒன்பது குழுக்களை சேர்ந்த, 124 பேர் பங்கேற்று, தங்கள் திறமையை நிரூபித்தனர். தேர்வு செய்யப்படும் குழுவினர் மண்டல அளவிலான நம்ம ஊரு திருவிழா நேர்காணலுக்கு அனுப்பப்படுவர். மண்டல அளவில் தேர்வாவோர், 2026ம் ஆண்டு சென்னையில் நடைபெற உள்ள 'சங்கமம்' நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை